18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் – போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

இராமநாதபுரம் – போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

எழுதியவர்: mohan June 26, 2019, 5:34 pm

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை சார்பில், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீளவும், போதைப் பழக்கத்தால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளில் இருந்து விடுபடுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் கலைவாணி , முதன்மை செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன நல மருத்துவர்கள் பெரியார் லெனின், அஸ்ரப் அலி ஆகியோர் மன நலம் மற்றும் போதை தடுப்பு பற்றி எடுத்துரைத்தனர். ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர், பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று மருத்துவர் குழுவிடமிருந்து போதைப்பொருள் தடுப்பு பற்றிய பல்வேறுபட்ட கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!