18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின ஊர்வலம்

மதுரை – சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின ஊர்வலம்

எழுதியவர்: mohan June 26, 2019, 3:42 pm

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை போதைபொருள் நுண்ணறிவு பிரிவு சார்பாக காந்தி மியூசியத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உறுதிமொழி கையெழுத்திட்டு, பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போதைபொருள் ஒழிப்பு தொடர்பான ஓவியம், கட்டுரை, வினாடிவினா போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பின்னர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார்.இவ்வூர்வலம் டாக்டர் தங்கராஜ் சாலை, உலக தமிழ் சங்கம் கட்டிடம், சட்டக்கல்லூரி வழியாக ரேஸ்கோர்ஸ்ல் டிவடைந்தது. இந்நிகழ்ச்சியில்மதுரை மாவட்ட (பொறுப்பு) ஆட்சியர் .சாந்தகுமார் தென்மண்டல காவல்துறை தலைவர் .சண்முக ராஜேஸ்வரன் மதுரை மாநகர காவல்துனை ஆணையர் சசிமோகன் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மதுரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்ராமகிருஷ்ணன் மற்றும் 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!