17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: mohan June 26, 2019, 3:06 pm

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு, யூத் ரெட் கிராஸ், பெய்த் ஆராய்ச்சி மையம், உதயம் குடிபோதை மறுவாழ்வு மையம் ஆகியன சார்பில் விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரத்தில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலிருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியில்ராமநாதபுரம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி, வேலு மாணிக்கம் கலை, அறிவியல் கல்லூரி, முகமது சதக் ஹமீத், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவிகள் கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட சேர்மன் எஸ்.ஹாரூண் வெளியிட, கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், ரெட் கிராஸ் புரவலர் தேவி உலக ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டு பொது மக்களிடம் விநியோகித்தனர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிசு வழங்கினார். யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளி நாயகம், இணை அமைப்பாளர் சி.எஸ்.ஐ., பி.எட்., கல்லூரி துணை முதல்வர் ஏ.ஆனந்த், கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் பேராசிரியை கே.மலர் விழி ( வேலு மாணிக்கம் கலை, அறிவியல் கல்லூரி), பேராசிரியை ஸ்ரீமதி (தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி), பேராசிரியை பிரியங்கா (முகமது சதக் ஹமீத் கலை, அறிவியல் கல்லூரி), பேராசிரியை ஜாஸ்மின் ( அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி), மது விலக்கு கூடுதல் டிஎஸ்பி லயோலா இக்னேஷியஸ் , நகர் டிஎஸ்பி நடராஜன் , போதை பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் வி.முத்துகண்ணு , சார்பு ஆய்வாளர் தங்க முனியசாமி , தலைமை காவலர்கள் முத்துராமலிங்கம் , சுப்ரமணியன் , சந்திரசேகர் ,பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்,போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர். ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட பொருளாளர் சி.குணசேகரன், ஆயுட் கால உறுப்பினர் ஏ. மலைக்கண்ணன் ஆகியோர் உள்ளிட்டோர் பேரணி ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!