18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி – சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி.

தூத்துக்குடி – சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி.

எழுதியவர்: mohan June 26, 2019, 2:22 pm

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர், வ.உ.சி கல்லூரி நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இன்று (26.06.2019) காலை 10 மணிக்கு ஜூன் 26 சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடத்தப்பட்டது.இந்த கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், போதை பொருள் உபயோகத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளையும், சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் மேலும் போதைப் பொருள் உபயோகத்திற்கு எதிராக உள்ள சட்டங்கள் குறித்தும் விளக்கினார்.போதைப் பொருள் பழக்கத்திற்கு பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஆட்படக்கூடாது என்றும், போதைப் பொருள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருக்கும் பட்சத்தில் “ஹலோ போலீஸ் அலைபேசி எண் 9514144100 மற்றும் 100 ஆகிய எண்ணிற்கு தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இடையே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.இக் கருத்தரங்கிற்கு வ.உ.சி கல்லூரி பேராசிரியர் நாகராஜன் வரவேற்புரையும், மருத்துவர் செவ்வேள் முருகன் முன்னுரையும், தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் முரளிதரன் நன்றியுரையுமாற்றினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, சார்பு ஆய்வாளர்கள், ஹெலன் ராணி, சண்முகவேலு, தலைமைக் காவலர் இதயத்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!