18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு மழை பெய்யாததே காரணம்” உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு மழை பெய்யாததே காரணம்” உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.

எழுதியவர்: mohan June 26, 2019, 2:11 pm

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் குடிநீர்,பசுமை வீடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு கூட்டத்தில்  பங்கேற்க சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணிக்கு  தூத்துக்குடி அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பின்பு  செய்தியாளர்களை சந்தித்த அவர்

செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றது இருந்தாலும் செயற்கை மழை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு மழை பெய்யாததே காரணம் சென்னையில் மழை பெய்து வெகுநாட்களாகி விட்டது.ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்குள் முடிக்கப்படும் . நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டு இருக்கின்றது – என உள்ளாட்சிதுறை  அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.பேட்டியின் போது வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு, தெற்கு மாவட்ட செயலாளரும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், மற்றும் விளாத்திகுளம்  சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும்  கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து அமைச்சர் உள்ளிட்டோர் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்த பின் திருநெல்வேலி சென்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!