17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – போலி போலிஸ்..4 போ் கைது..

உசிலம்பட்டி – போலி போலிஸ்..4 போ் கைது..

எழுதியவர்: mohan June 26, 2019, 12:52 pm

உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கேட் விற்பனை செய்தவரிடம் போலீஸ் என கூறி பணம் பறித்த 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து 15 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புளிய மந்தை தெருவைச் சேர்ந்த ஞானமுருகன் (50) என்பவர் சட்ட விரோதமாக நகரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தும்மக்குண்டுவைச் சேர்ந்த சுரேஷ் (35) மற்றும் ராமன் (42), அன்பு மாயன் (38), கனேசன் (52) ஆகியோர் நாங்கள் தனிப்படை போலீசார் என கூறி ஞானமுருகனிடம் ரூபாய் 30000 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை வழங்கிய ஞானமுருகன் அவர்கள் காவலர்கள் தான என சந்தேகப்பட்டு உசிலம்பட்டி காவல் நிலையத்தை அனுகினார். போலீசார் விசாரனை செய்ததில் போலிஸ் என கூறி பணம் பறித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் 4 பேரையூம் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூ 15000 ரொக்க பணம், 2 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!