உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வேகமாக நடந்துகொண்டு இருக்கின்றது நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.
நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் குடிநீர்,பசுமை வீடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது இதில் பங்கேற்க சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றதுஇருந்தாலும் செயற்கை மழை குறித்து ஆய்வு நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார் மேலும்தமிழகத்தில் மழை பெய்யாததே குடிநீர் பிரச்சினைக்கு காரணம்சென்னையில் மழை பெய்து வெகுநாட்களாகி விட்டது என்றார் ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது இன்னும்இரண்டு மூன்று வாரத்திற்குள் முடிக்கப்படும் என்ற அவர்உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வேகமாக நடந்துகொண்டு இருக்கின்றது நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.




You must be logged in to post a comment.