வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் 883.29 கோடி ருபாயில் முதல் கட்டமாக ரூ 212 கோடியில் 34 பணிகள் முடிந்து உள்ளன. இந்தியாவில் குப்பை தொட்டி இல்லா நகராட்சியில் வேலூர் மட்டுமே உள்ளது.ரூ 13. 24 கோடியில் சர்க்கார் தோப்பில் சோலார் பூங்கா உருவாக்கப்படும். இதன் மூலம் 2 .4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மாநகராட்சி எல்லை பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.போக்குவரத்து பாதிப்பை தடுக்கும் வகையில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்திலும் லாரி ஷெட் இடத்திலும் மல்டி லெவல் பார்க்கிங் பாயின்ட் அமைக்கப்படும்வேலூர் கோட்டை அகழியை தூர்வாருவதுடன் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும்ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ 243 கோடி செலவில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதுவேலூர் மாநகராட்சியில் 2021-க்குள் அனைத்து ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்படும் என்று அவர் கூறினார்
உடன் பொறியாளர் சீனிவாசன் மண்டல உதவி ஆணையர்கள் மதிவாணன், வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
இந்தியாவில் குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சி -வேலூர் ஆணையர் தகவல்
எழுதியவர்: mohan June 26, 2019, 12:05 pm




You must be logged in to post a comment.