இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் அருகே கொழுந்துறை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை விசாரித்த ஆட்சியர் ஜூன் 25 ஆம் தேதிக்குள் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார். ஆனால், இன்று வரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, சங்கர் தலைமையில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.முதல் கட்டமாக கிராம மக்கள் பால் காய்ச்சி தங்களது போராட்டத்தை துவங்கினர். இப்போரட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
எழுதியவர்: mohan June 26, 2019, 11:57 am







You must be logged in to post a comment.