17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – வங்கிக் கடன் தருவதாக மோசடி

மதுரை – வங்கிக் கடன் தருவதாக மோசடி

எழுதியவர்: mohan June 26, 2019, 10:12 am

மதுரை சம்மட்டி புரத்தில் சேர்ந்த அங்குசாமி இவர் கோச்சடையில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் கடந்த 19ஆம் தேதி தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களுக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வங்கிக் கடன் தருவதாக ஒரு இளம் பெண் தனது ஐடி கார்டை வாட்ஸ்அப் மூலம் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் இதனை நம்பி இவரும் அவருடைய ஏடிஎம் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் அனைத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார் உங்களது ஒரு sms வரும் என தகவல் தெரிவித்துள்ளார் அதன் பிரகாரம் வாட்ஸ் அப்பில் அவருக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது உங்களுடைய செல்போனுக்கு வந்துள்ள sms இல் உள்ள ஓடிபி எண்ணை தருமாறு கேட்டுள்ளார் இதை நம்பி அவர் கொடுத்த உடன் அவர் வங்கி கணக்கில் இருந்து சுமார் 25,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது ஆயிரம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் இது போன்ற ஏமாற்று பேர்வழிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் காவலர்கள் தெரிவித்தன இதுபோன்ற மோசடி பேர்வழிகளை யாரும் நம்ப கேட்டுக் மிகமிக எச்சரிக்கையாக தங்களது வங்கி ஏடிஎம் கார்டு அல்லது பின் நம்பர் என கூடிய ரகசிய குறியீட்டு எண்ணை யாருக்கும் கொடுக்க கூடாது என காவல்துறை கேட்டுக் கொண்டனர்

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!