இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன், கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் 15வது மாவட்ட செஸ் விளையாட்டு போட்டி செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 5 பிரிவுகளில் நடக்கும் இப்போட்டியில் 7, 9, 11, 13, 15 வயதிற்குட்பட்டோர் கலந்து கொள்ளலாம். 5 சுற்றுகளாக போட்டி நடத்தப்படும். 3 முதல் பிரிவு போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ஒரு பரிசு கோப்பை வழங்கப்படும். 4, 5 ஆம் பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ஒரு பதக்கம் பரிசளிக்கப்படும். முதல் சுற்று போட்டி காலை 9:30 மணி, 2வது சுற்று நண்பகல் 11:00 மணி, 3வது சுற்று மதியம் 12:30 மணி, 4ஆம் சுற்று மதியம் 2:30 மணி, 5 ஆம் சுற்று போட்டி மாலை 4 மணிக்கு தொடங்கும். மாலை 5:30 மணிக்கு போட்டி நிறைவடைந்து பரிசளிக்கப்படும்.
2019 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தியோர் மட்டுமே போட்டியில் பங்கு பெறலாம். மாவட்ட பதிவிற்கு அதற்குரிய விண்ணப்பத்துடன் பாஸ் போர்ட் அளவு போட்டோ, பிறப்பு சான்று நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். செஸ் போட்டியில் கலந்து கொள்ள அதற்குரிய விண்ணப்ப படிவத்துடன் நுழைவு கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். முதன்மை ஆர்ப்பிட்டரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் செஸ் பலகை, கடிகாரம் சொந்த மாக கொண்டு வர வேண்டும். கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் செயலர் டாக்டர் எஸ்.சுந்தரம், ராமநாதபுரம் வர்த்தக சங்க கட்டட முதல் மாடியில் உள்ள மாவட்ட செஸ் அசோசியேஷன் மாவட்ட செயலர் ராக்லாண்ட் மதுரம் ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம். chessramnad.blogspot.com என்ற இணைய தள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 94431 34135, 94436 10956, 82480 88338 ஆகிய எண்களில் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ராமநாதபுரம் எண் 9, அலங்கச்சேரி மாடியில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் ஜூலை 3 ஆம் தேதிக்குள் கொடுக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலர் ராக்லாண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.
கீழக்கரையில் ஜூலை 7ல் 15வது மாவட்ட செஸ் போட்டி
எழுதியவர்: mohan June 26, 2019, 9:49 am




You must be logged in to post a comment.