17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தனியாரின் தண்ணீர் கொள்ளை முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றச்சாட்டு..

இராமநாதபுரத்தில் தனியாரின் தண்ணீர் கொள்ளை முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றச்சாட்டு..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2019, 10:39 pm

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூ., சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இதனையடுத்து ரூ.617 கோடி மதிப்பில், ஆண்டுக்கு ரூ.17.29 பராமரிப்பு செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ஜூன் 9, 2009ல் திமுக அரசு நிறைவேற்றியது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் 2011 வரை தொய்வின்றி பயன் அடைந்து வந்தனர்.

2011 மே மாதத்தில் அதிமுக., அரசு பதவியேற்ற துவங்கியதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு தொய்வால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்நிலை தொடர்வதால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 விலை கொடுத்து வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் பல கிராமங்களில் கிடைக்காததால் தண்ணீர் தேடி காலிக்குடங்களுடன் பெண்கள் அலையும் நிலை தொடர்கிறது .

ஜூன் 22 ல் திமுக., தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.  அரசியல் கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து அரசு நடவடிக்கை முனைப்பு காட்டப்படுகிறது. இதைதொடர்ந்து, இராமநாதபுரத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை களையக்கோரி இந்திய கம்யூ., (மார்க்ஸிஸ்ட்) சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி கூறியதாவது: திமுக., அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்திய காவிரி குடிநீர் திட்டத்தை தற்போதைய அதிமுக., அரசு பராமரிக்காமல் போடப்பட்டுள்ளது. 25 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பீடுகையில் மாவட்டத்தில் மழை பொழிவு குறைவாக உள்ளது. மனிதர்களுக்கு மட்டுள்ள, நீர் நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.12 க்கு விற்கப்படுகிறது. தனியாரின் தண்ணீர் கட்டண கொள்ளை நாளுக்குள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தமிழக சட்டமன்றத்தை உடனே கூட்டி தீர்வு காண வேண்டும். ஏரி, குளங்களில் தண்ணீர் வரத்து மற்றும் தண்ணீரின் இருப்பு அளவு விவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும். திமுக., கூட்டணி கட்சிகளின் போராட்டத்திற்கு பிறகு தண்ணீர் பிரச்னையை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்ட துவங்கியது. மக்களுக்கு கட்டணமின்றி தண்ணீர் விநியோகிக்க வேண்டும், தனியாரின் தண்ணீர் கட்டண கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!