17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக நல அமைப்பு முயற்சியால் அழகிய மணல் மேடாக மாறிய குப்பை மேடு…

சமூக நல அமைப்பு முயற்சியால் அழகிய மணல் மேடாக மாறிய குப்பை மேடு…

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2019, 9:34 pm

கீழக்கரையில் உள்ள முக்கிய தெருக்களில் ஒன்று வடக்கு தெருவாகும்.  இத்தெருவில் இருந்து இரண்டு நகராட்சி சேர்மன் பதிவி வகித்த பெருமையும் உண்டு.  ஆனால் சுகாதாரம் என்ற கேள்வி எழுந்தார் எப்பொழுதும் விடையே கிடைக்காது, அந்த அளவுக்கு பல இடங்களில் வற்றாத ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர், திறந்த நிலையில் அசுகாதாரமான வகையில் திறந்து கிடக்கும் வாருகால் மூடிகள் என அடுக்கி கொண்டே போகலாம். அதன் வரிசையில் வடக்குத் தெரு தொழுகை பள்ளி அமைந்திருக்கும் முக்கிய சாலையில் மக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் மின்சார டிரான்ஸ்ஃபாருக்கு கீழே அபாயம் விளைவிக்கும் வகையிலும், சாலையில் சிதறிய வண்ணம் கழிவுகள் கிடந்து வந்தது.  இதற்கு எதிரிலேயே உணவகம் மற்றும் அரசியல் பிரமுகரின் அலுவலகமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக தனி நபர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் என புகார் செய்தும் எந்த நிரந்தர தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் முயற்சியில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வண்ணம் கண்கானிப்பு கேமரா மற்றும் எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டுள்ளது.  இனி சுத்தம் செய்த இடத்தையாவது, சுத்தமாக பேணுகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!