இன்று குடிநீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் தான். ஏனெனில் ஏரிகள் குளங்கள் புறம்போக்கு நிலங்கள் எல்லாம் காமெடி நடிகர் வடிவேலு சொன்ன மாதிரி காணாமல் போய் விட்டது.
விவசாய நிலங்கள் அழிந்து கட்டிடங்கள் வந்து விட்டது. மக்கள் தொகை பெருகி வருகிறது. அதை கவனத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தது, போன்ற காரணங்களால் இன்று குடிநீர் பிரச்சனையில் மக்கள் சிக்கி தவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
மழை காலங்களில் நீரை சேமிக்க இடங்கள் இல்லாத நிலையில் தமிழகம் உள்ளது. எதிர் கட்சிகளும் இதை அரசியல் ஆதாயத்திற்காகவே பயன் படுத்துகின்றனர். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அனைவரும் ஒன்று பட்டு செயல் பட வேண்டும் என்று அழகிய தமிழகம் கட்சிகளின் மாநில தலைவர் எஸ்.கே.சசிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




You must be logged in to post a comment.