மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது.
இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் அவரவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு அவரவர்களின் தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கல்விச்சான்றிதழ் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வந்து முகாமில் கலந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மகாலெட்சுமி தெரிவித்துள்ளார்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்




You must be logged in to post a comment.