17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் சொகுசு பேருந்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு… இருவர் கைது..

தனியார் சொகுசு பேருந்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு… இருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2019, 6:42 pm

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட JK கல்லூரி அருகே இன்று அதிகாலை காலை சுமார் 4.30 மணிக்கு பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த KPN தனியார் சொகுசு பேருந்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின் பேரில் SP தனிப்படை காவலர்கள் மேற்படி பேருந்தை சோதனை செய்ய சென்ற போது பேருந்திலிருந்து அவசர அவசரமாக 1சரக்கு வாகனத்திலும் மற்றொரு இண்டிகா காரிலும் பெரிய பெரிய மூட்டைகளை மாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது தனிப்படையினர் அவற்றை சோதனை செய்ததில் அவை அனைத்தும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து பெங்களூரில் இருந்து மேற்படி குட்கா பொருட்களை கடத்தி வந்த தனியார் சொகுசு பேருந்து மற்றும் திண்டுக்கல்லில் இருந்து சரக்கு மாற்ற வந்த 2 வாகனங்களையும் கைப்பற்றி அவர்களிடமிருந்து 700 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கைப்பற்றியும், கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் கைது செய்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுவாக காவல்துறையினர் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்வது அனைவரும் அறிந்ததே. சொகுசு பேருந்தில் சோதனை செய்வது கிடையாது என்பதை அறிந்து பிரபலமான  தனியார் சொகுசு பேருந்தில் போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளனர். மிகவும் சாமர்த்தியமாகவும் துரிதமாக செயல்பட்டு பேருந்திலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றப்பட்டதை பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

இதேபோல சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து தனியார் சொகுசு பேருந்து களையும் ஆய்வு செய்து சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!