17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்சியருடன் செஸ் விளையாடி அசத்திய அரசு பள்ளி மாணவர்

ஆட்சியருடன் செஸ் விளையாடி அசத்திய அரசு பள்ளி மாணவர்

எழுதியவர்: mohan June 25, 2019, 5:19 pm

ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் கிராமத்தில் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், செய்தியாளர்களுடன் இன்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாக விளையாட்டு திடல்மர நிழலில் கோ- கோ விளையாடிய மாணவர்களிடம் கலந்துரையாடினார். உங்களுக்கு என்னென்ன விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது என கேட்டார். செஸ், கேரம் என பதிலளித்த மாணவ, மாணவியரிடம் செஸ் யாருக்கு விளையாடத் தெரியும் என கேட்டார். அனைவருக்கும் தெரியும் என கையை உயர்த்திய மாணவர்களை ஆட்சியர் பாராட்டினார். எட்டாம் வகுப்பு மாணவர் ஜீவா உடன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒரு செட் செஸ் விளையாடினார். தன்னுடன் முழு ஈடுபாடுடன் விளையாடி திறமையை வெளிப்படுத்திய மாணவர் ஜீவாவை ஆட்சியர் பாராட்டினார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ராமமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய காவிரி குடிநீர் திட்ட நிர்வாக உதவி பொறியாளர் ஜவகர் கென்னடி, உதவி பொறியாளர் ஹேமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!