17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த 7 போ் ஆயுதங்களுடன் கைது.

மதுரை – சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த 7 போ் ஆயுதங்களுடன் கைது.

எழுதியவர்: mohan June 25, 2019, 4:51 pm

எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் மகேந்திரன் பொன்மேனி சந்திப்பின் அருகே காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஏழு நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது ஏழு நபர்களும் சேர்ந்து மதுரை பைபாஸ் ரோட்டில் வரும் நபர்களை வழி மறித்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், அவ்வாறு கொள்ளையடிக்கும்போது யாராவது தடுத்தால் அவர்களை தாக்குவதற்காக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.இது தொடா்பாக மகேந்திரன் உதயகுமார் பாண்டிஆனந்தராஜ் அருண்குமார் முத்துப்பாண்டி அஜித்குமார் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். ஏழு நபர்களிடம் இருந்து ஒரு கார், இரண்டு கத்தி, ஒரு அருவாள், இரண்டு உருட்டுக்கட்டை, இரண்டு மிளகாய்பொடி பாக்கெட்டுகள், ஏழு செல்போன்கள், பணம் ரூ. 41,000/- ஆகியவைகள் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!