18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குன்னூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

குன்னூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2019, 4:35 pm

உதகை மாவட்ட ஆட்சியர் திரு.இன்னஸன்ட் திவ்யா தலைமையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இன்று (25/06/2019) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 கடைகளை, போலீசாரின் உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பல்வேறு இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்தன.

அந்த வகையில் குன்னூரில் நீர்நிலைகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கடைகளை, காலி செய்யுமாறுக் கூறி அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், இதுவரை கடைகள் காலி செய்யப்படவில்லை. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 42 கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!