18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

எழுதியவர்: mohan June 24, 2019, 8:43 pm

மதுரை மாவட்டம் திருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு கோரியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட திருநகரில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மற்றும் உசிலை சிவா மணிமாறன் ஆகியோர் ஹார்விபட்டியிலிருந்து திருநகர் வரை மிதிவண்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள்,பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கலந்துகொண்டு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் தமிழ் நாட்டில் நிலவிவரும் பிரச்சனை குறித்த தண்ணீர் பெரும் பிரச்சனையாக தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் ஆளும் அதிமுக அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு நிரந்தர தீர்வு கான கோரி திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் செய்தோம் . மேலும் குடிநீர் பஞ்சம் நிலவும் மாவட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுபடி சீராக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.அதிமுக நடத்தும் மழை வேண்டி வருண ஜபம் வழிபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறுகையில்,அதிமுக அரசு மழை வேண்டி வருண ஜப வழிபாடு நடத்துகிறது. இது ஒருபக்கம் நல்லதாக இருந்தாலும் மறுவகையில் சாத்தியமில்லை என்றால் மழை பெய்வதற்கு மரக்கன்றுகள் நட்டு வளங்களை பாதுகாக்க வேண்டும். மேலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி நாங்கள் அனைத்து மாவட்டங்களிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!