18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பருத்தி வீரன்

இராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பருத்தி வீரன்

எழுதியவர்: mohan June 24, 2019, 8:37 pm

அண்ணனை கழுத்தறுத்து விட்டு 13 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த பருத்திவீரன் சிக்கினார்.

இராமநாதபுரம் வாலாந்தரவை அம்மன் கோவில் மூக்காண்டி மகன் பருத்தி வீரன் (எ) சேதுபதி, 33. இவரது அண்ணன் ராமச்சந்திரன். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த உறவினர் காதணி விழாவின் போது ராமச்சந்திரனை, சேதுபதி கழுத்தறுத்து கொலை செய்தார். மேலும் வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் சேதுபதி மீது நிலுவையில் உள்ளன. இதையடுத்துசேதுபதி தொடர்ந்து தலை மறைவாக இருந்தார். பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில், கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் பருத்தி வீரனை இன்று கைது செய்து, ராமநாதபுரம் ஜே.எம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!