17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ

குடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ

எழுதியவர்: mohan June 24, 2019, 8:10 pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சங்கரலிங்கபுரத்தில் பெண்களுக்கான கபடி போட்டி தொடக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ. ராஜூ கலந்து கொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுனாமி, கஜா புயல் காலங்களில் தமிழக அரசு சிறப்பாக நிவாரண பணிகளை மேற்கொண்டு மக்களை இயல்புநிலைக்கு கொண்டு வந்தது.அதேபோல் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும்,மக்கள் பிரச்சினையில் திமுக நல்ல எதிர்கட்சியாக  அரசு உடன் ,இணைந்து செயல்படமால் அரசியலுக்காக மக்களிடையே பீதி கிளம்பி வருகின்றனர்,குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், ஆனால் திமுக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் குடிநீர் பிரச்சினையில் அரசியல் செய்து வருவது கண்டனத்துக்குரியது என்றார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!