18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…

உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2019, 5:51 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி ஊருக்கு அருகாமையில் உள்ள மலை அடிவாரத்தில் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பட்டபகலில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், உடனே போலீசார் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததுடன், அச்செயலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அவர் களிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!