18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி

எழுதியவர்: mohan June 24, 2019, 12:40 pm

வேலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 369 ரவுடிகளை கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்களில் பயங்கரமான குற்றவாளிகளாகக் கருதப்படும் 35 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் பெருகிவருகிறது. ரவுடிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள். பிரபல ரவுடிகளான சத்துவாச்சாரியைச் சேர்ந்த வசூர் ராஜா, வீச்சு தினேஷ், காட்பாடியைச் சேர்ந்த ஜானி ஆகியோர் தலைமையிலான ரவுடி கும்பல்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் பொது இடங்களில் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இந்த நிலையில், ரவுடிகளை ஒடுக்கக் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ரவுடிகள் பட்டியலில் இருக்கும் குற்றவாளிகளை கைதுசெய்ய எஸ்.பி பிரவேஷ்குமார் தலைமையிலான போலீஸார் தீவிரம் காட்டியுள்ளனர்..

கே, எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!