18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..

நிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2019, 10:34 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நூத்துலாபுரம் ஊராட்சியில் உள்ள சீத்தாபுரம், எஸ். தும்மலப்பட்டி, விராலிப்பட்டி, உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் காவேரி மற்றும் வைகை ஆற்று கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கிராமங்களுக்குச் சென்ற தண்ணீர் கடந்த 10 தினங்களாக வீணாகிப் சீத்தாபுரம் பாப்பாகுளம் அருகே உள்ள அங்குள்ள ஓடையில் பெரிய தெப்பம் போல் நிற்கிறது. இன்றைய சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் இங்குமங்குமாக பொதுமக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வேலையில் சுமார் 2 லட்சம் லிட்டர் குடிநீர் ஓடையில் வீணாகி போவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.

கடந்த 10 நாட்களாக குடிநீர்  வீணாகும் சம்பவத்தை பலதரப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எடுத்துக் கூறியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவில் உள்ள அனைத்து குழாய்களையும் கண்காணிப்பு முறையாக குடிநீர் வீணாகாமல் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் கிடைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!