17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் உலக சித்தர்கள் ஞான பீடம் சார்பில் மழை வேண்டி மகா யாக பூஜை..

மதுரையில் உலக சித்தர்கள் ஞான பீடம் சார்பில் மழை வேண்டி மகா யாக பூஜை..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2019, 10:24 pm

மதுரை தமுக்கம் மைதானத்தில் உலக சித்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த விழாவிற்கு  உலக சித்தர்கள் ஞான பீடம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரத்தினம் மாணிக்கம் தலைமை பொதுச் செயலாளர் ஜோதிராமலிங்கம் செயல் தலைவர் சிவஸ்ரீ க ராஜசேகர சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சித்தர்கள் மாநாட்டில் மழை வேண்டி மகா யாகம் நடத்தப்பட்டது.

இந்த யாக பூஜைக்கு முன்னர் கஜபூஜை, கோபூஜை, அஸ்வ பூஜை, சிவகண வாத்தியங்கள், மகேஸ்வரி பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான silambam, பரதம், இரட்டை சிலம்பம், வாள், சுருள்வாள் மற்றும் சிவதாண்டவம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதோடு சித்தர் பாடல்கள் இன்னிசை கச்சேரிகள், பட்டிமன்றம் நடைபெற்றன. இந்த சித்தர் மாநாட்டில் 18 அடி உயர ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்திராட்சத்தில் லிங்கம் அமைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதிலிருந்தும் சாதுக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

யாக பூஜை யின் போது சாரல் மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!