17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில்­­­ ஸ்ரீ இராமானுஜர் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா..

மதுரையில்­­­ ஸ்ரீ இராமானுஜர் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2019, 10:07 pm

மதுரையில்­­­ ஸ்ரீ இராமானுஜர் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வா௧ சுமார் ௹.1.8 கோடி மதிப்பிலான ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா அரங்கம், அடிக்கல் நாட்டு விழா 22.06.2019 சனிக்கிழமை காலை அழகர் கோயில் அருகிலுள்ள அயன் அய்யாதுப்பட்டி கிராமத்தில் நடந்தது. அழகர்கோவிலின் முக்கிய அர்ச்சகரான ஸ்ரீ உ.வே.அம்பி பட்டர் அடிக்கல் நாட்டு விழா சிறப்பு பூஜையைச் செய்தார். ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் குறைந்த வாடகையில் இவ்வரங்கம் திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும்.

22.06.2019 சனிக்கிழமை மாலை மதுரை காமராஜர் சாலையில் உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் Mepco மினி அரங்கில், பெரியகுளம் திண்டுக்கல் சாலையில் உள்ள அழகர் நாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் அமைய உள்ள ௹. 85 லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகள் நூறு பேருக்கான இலவச மறுவாழ்வு பயிலகம், நிறைவகம் மற்றும் தேனியில் அமைய உள்ள ௹. 2 கோடி மதிப்பிலான தக்ஷிண அஹோபிலம் என்னும் புதிய நரசிம்ஹர் திருக்கோயில் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் ஸ்ரீவைஷ்ணவ பெருமக்களும், ஆன்மீக அன்பர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஏற்கனவே மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க யானை வாகனம் வழங்கப்பட்டது மற்றும் 55 லட்சம் செலவில் இருளர்களின் குடியிருப்புகள் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இவ்வறக்கட்டளை பணி செய்துள்ளது என்று ராமானுஜர் அறக்கட்டளை சார்பாக சமூக பணிகளும், சமய பணிகளும் இணைத்து தி௫.வரதன் சந்தர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில் மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.விசாகன் IAS தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார் மற்றும் மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் முனைவர் ஆ.மணிவண்ணன்  சிறப்புரையாற்றினார். ஸ்ரீ இராமானுஜர் அறக்கட்டளை சார்பில் வரதன் சந்தர், சுஜா அரசகுமார் ஆகிய அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!