17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே சாக்கடை கலந்த குடிநீரை குடிக்கும் கிராமமக்கள்

நிலக்கோட்டை அருகே சாக்கடை கலந்த குடிநீரை குடிக்கும் கிராமமக்கள்

எழுதியவர்: mohan June 23, 2019, 12:39 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நூத்துலாபுரம் ஊராட்சி , குளத்துப்பட்டி உள்ள மேற்குத் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் பொதுமக்கள் தினந்தோறும் கூலி வேலை செய்து தான் தனது பிழைப்பை நடத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக கிழக்கு தெருவில் இருந்து மேற்கு தெருவிற்கு ஊராட்சி சார்பாக தினந்தோறும் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.   நீர் வினியோகம் செய்யும் குழாய்களின் மேல் பகுதியில் சாக்கடை அமைந்துள்ளது. குடிநீர் செல்லும் குழாய்களின் வழியாக மனித மலம், மற்றும்  சாக்கடைகள் கலந்த தண்ணீரை தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள்.   இந்தச் சாக்கடை கலந்த நீரை தினந்தோறும் குடிப்பதால் இக்கிராமத்தில்  உள்ள பெரும்பாலான மக்களுக்கு     பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது.எனவேசாக்கடையை முறையாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்கள் நேரடியாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்..

   எனவே வருகிற 2 மாதத்திற்குள் இந்தச் சாக்கடை கலந்த நீரை வழங்கும் நிலையை மாற்றி குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த கிராமங்களும் கிராம மக்களும் திரண்டு வருகிற வருகிற ஆகஸ்ட் மாதம் கிராமத்தில் நடக்கும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!