18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சங்கரன்கோவில் – வீரசிகாமணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

சங்கரன்கோவில் – வீரசிகாமணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

எழுதியவர்: mohan June 23, 2019, 12:16 pm

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் வீரசிகாமணி ஊராட்சியில் மழை நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு தொடர்பான சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன்  மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சுப்பிரமணியன் , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.கார்த்திகேயன், ஊராட்சி செயலர்லட்சுமணன், அமர்சேவா சங்க ஒருங்கிணைப்பாளரும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியுமான கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் நீர் ஆதாரத்தை அதிகரிப்பது மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் மரம் நடுவதன் நோக்கம்,சிறப்பு,பயன் குறித்து மாற்றுத்திறனாளி பிரதிநிதி கனகராஜ் எடுத்துரைத்தார்.இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக கிராமநிர்வாக அலுவலகத்தின் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலரால் மரக்கன்று நடப்பட்டது.

இக்கூட்டத்தில் பொது மக்கள்,மாற்றுத்திறனாளிகள்,சுய உதவி குழுக்கள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் கடந்த மாதம்  நடைபெற வேண்டிய வேண்டிய கிராமசபை கூட்டம் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 28.06.2019 ம் தேதியன்று கிராம சபை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!