17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் – விஜயின் பிறந்த நாள் குழந்தைகளுக்கு மோதிரம்

இராமநாதபுரம் – விஜயின் பிறந்த நாள் குழந்தைகளுக்கு மோதிரம்

எழுதியவர்: mohan June 23, 2019, 12:05 pm

நடிகர் விஜயின் 45 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட விஜய் மன்றம் சார்பில் 45 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கு பழம், பிஸ்கட், குடிநீர் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (22.6.19) பிறந்த 10 குழந்தைகளுக்கு ஒரு கிராம் வீதம் 10 தங்க மோதிரம் குழந்தைகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயபாலன் தலைமையில் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ரத்த தானம் அளித்தனர். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏர்வாடி, கீழக்கரை, பரமக்குடி , மண்டபம், ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளையோர் விழாவில் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் செந்தில், இளைஞரணி மாவட்ட தலைவர் திவாகரன், துணை தலைவர் ரஞ்சன் , மூர்த்தி, துணை செயலாளர் சதீஷ், பொருளாளர் சச்சின் சரவணன், தொண்டரணி தலைவர் ஹாஜா, மாணவரணி செயலர் மகாதீர், அருண், பரமக்குடி ஒன்றிய தலைவர் சவுந்தர பாண்டியன், போகலூர் ஒன்றிய தலைவர் முனியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!