கடலாடியில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கடலாடி ஒன்றிய அறிவியல் இயக்க மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டிற்கு காமராஜர் மெட்ரிக் பள்ளி தாளாளர் முனியசாமி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேந்தர் அனைவரையும் வரவேற்றார். ஒன்றியச்செயலாளர் கண்ணன் இயக்கச்செயல்பாடுகள் குறித்த அறிக்கை வாசித்தார். இதில் மாவட்டச்செயலாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கடலாடி அரசு கல்லூரி விரிவுரையாளர் நீரா.பொன்முத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்த மாநாட்டில் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக முனியசாமி,செயலாளராக கண்ணன், பொருளாளராக சுரேந்தர், துணைத்தலைவராக நீரா.பொன்முத்து, துணைச்செயலாளராக மகாலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக உடற்கல்வி ஆசிரியர் முத்துமணி நன்றி கூறினார்.







You must be logged in to post a comment.