18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர் – மாணாக்கருக்கு விலையில்லா மடிக்கணினி .அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

முதுகுளத்தூர் – மாணாக்கருக்கு விலையில்லா மடிக்கணினி .அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

எழுதியவர்: mohan June 23, 2019, 11:32 am

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி , முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில்  பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற விழாக்களில் 4,506 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளைதகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன்வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பரமக்குடி , போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 1,616 மாணவ, மாணவியருக்கு கமுதி கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 பள்ளிகளைச் சேர்ந்த 1,679 மாணவ, மாணவியருக்கு சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,211 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிவழங்கப்பட்டது. விழாக்களில் தகவல் தமிழக தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 39 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிவழங்கப்பட்டு உள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கு 15.5 லட்சம் மடிக்கணினி தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கும் வகையில் தமிழக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் 10,500 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சேவை மையங்கள் மூலம் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களுக்குத் தேவையான அடிப்படைசான்றுகள சிரமமின்றி பெற்று பயனடையலாம்.ஊராட்சி அளவில் இணைய சேவையை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பில்12,524ஊராட்சிகளைஇணையவழியில்ஒருங்கிணைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தைமுழுமையாகசெயல்படுத்துவதன் மூலம் அரசு நடைமுறைப்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை இணையவழியில் ஊரக மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க முடியும்.அதைப்போல ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி, விமான நிலையம் ஏற்படுத்த தமிழக முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ராமநாதபுரத்தில் அரசுமருத்துவக்  கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமன், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் (பொ) பாலு முத்து, மாவட்டக் கல்வி அலுவலர் பிரேம், மைக்கேல்பட்டினம் வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.ஏ.முனியசாமி உட்பட அரசு அலுவலர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!