17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் இருவேறு நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் பங்கேற்பு.

உசிலம்பட்டியில் இருவேறு நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் பங்கேற்பு.

எழுதியவர்: mohan June 23, 2019, 11:05 am

உசிலம்பட்டியில் இருவேறு நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாலுகாவில் உள்ள 8 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2748 தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மதுரை பொறுப்பு மாவட்ட ஆட்சியர் சாந்தகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ளஅறநிலைக்குசொந்தமன திருமுருகன் கோவிலில் மழைவேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பின்பு அன்ன தானமும்  நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!