18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – திமுக ஆட்சியில் தான் நீர்நிலைகளையெல்லாம் பட்டா போட்டு கொடுத்தனர் என வருவாய்துறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் பகிரங்க குற்றச்சாட்டு.

உசிலம்பட்டி – திமுக ஆட்சியில் தான் நீர்நிலைகளையெல்லாம் பட்டா போட்டு கொடுத்தனர் என வருவாய்துறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் பகிரங்க குற்றச்சாட்டு.

எழுதியவர்: mohan June 22, 2019, 5:22 pm

 திமுக ஆட்சியில் தான் நீர்நிலைகளையெல்லாம் பட்டா போட்டுகொடுத்தனர் என வருவாய்துறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் பகிரங்க குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உ;ள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாலுகாவில் உள்ள 8 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2748 தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மதுரை பொறுப்பு மாவட்ட ஆட்சியர் சாந்தகுமார் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ள அறநிலைக்கு சொந்தமான திருமுருகன் கோவிலில் மழைவேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்பு அன்னதானமும் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக ஆட்சியில் தான் நீர்நிலைகளையெல்லாம் பட்டா போட்டுகொடுத்தனர் என வருவாய்துறை அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் பகிரங்க குற்றச்சாட்டி பேசினார்.

உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!