திருச்சி திமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே. என். பேட்டி….. காலையில் நான் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கேட்கும் பட்சத்தில் திமுகவும் அதிக இடங்களை கேட்போம் என்ற அர்த்தத்தில் தான் அப்படி பேசினேன்.
திமுக தனித்து நிற்கவே தலைமையிடம் கேட்போம் ஆனால் தலைமை காங்கிரஸ் கூட்டணி உறுதி என்றால் அதற்கும் கட்டுப்படுவோம் இது கலக குரல் அல்ல, கழகத்தின் குரலும் அல்ல நான் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர் அல்ல.கூட்டணியில் இருந்த போதே காங்கிரஸார் கலைஞரை விமர்சனம் செய்தனர். அதனை பொறுத்துக்கொண்டு தான் நாங்கள் இப்போதும் கூட்டணியில் உள்ளோம்.உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் கூடுதல் இடத்தில் நிற்போம்.திமுகவில் வேலை பார்ப்பவர்கள் நாங்கள் என்று கூறினார்.




You must be logged in to post a comment.