மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் இலவச மடிக்கனிணி வழங்கும் நிகழ்ச்சிக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை அமைச்சர்ஆர்பி உதயக்குமார் கலந்து கொள்கிறார். இதற்காக காலை 8 மணி முதல் பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைகளில் தட்டு வைத்து, பள்ளிவளாகத்தில் நுழைவுவாயில் நிற்க்க வைக்கப்பட்டனர், அமைச்சர் உசிலம்பட்டிக்கு வருவது மதியம் 1 மணிக்கு மேல் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதும் காலையிலேயே உணவு உண்ணவிடாமல் மாணவிகளை அழைத்து வந்து நிற்க வைத்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்.






You must be logged in to post a comment.