17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் போலீசார் ரத்த தானம்

ராமநாதபுரத்தில் போலீசார் ரத்த தானம்

எழுதியவர்: mohan June 22, 2019, 3:25 pm

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தன்னார்வ ரத்த தான முகாம் நடந்தது.

ராமநாதபுரத்தில் காவல்துறை சார்பாக நடந்த தன்னார்வ ரத்ததான முகாமை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ரத்த தானம் செய்து தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், மருத்துவ அதிகாரி டாக்டர் சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் மாவட்ட, தாலுகா போலீசார், ஆயுதப்படை போலீசார், கமுதி தனி ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 113 பேர் ரத்ததானம் செய்தனர். ராமநாதபுரம் ரத்த வங்கி டாக்டர் பத்தூல் ராணி பாத்திமா, சிவகங்கை ரத்த வங்கி மருத்துவர் தென்றல் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம், சிவகங்கை ரத்த வங்கி மருத்துவ குழுவினர் ரத்த சேகரித்தனர். ரத்த தான முகாம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் ஒருங்கிணைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!