18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் சிறப்பு கிராம சபை கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் சிறப்பு கிராம சபை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 22, 2019, 2:30 pm

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் தும்படைக்கா கோட்டை ஊராட்சி பொன்மாரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று 22-6-19 நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மழை நீர் சேமிப்பு மற்றும் பருவகால நிலைமைகள், நீர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பு கிராம சபை இன்று (220/06/2019) நடைபெற்றது..

பொன்மாரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தும்படைக்கா கோட்டை ஊராட்சி செயலர் அந்தோனி சாமி , துணை மண்டல அலுவலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பொன்மாரியில் நடைபெற்ற இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கலந்து கொண்டு தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான கோரிக்கை வைத்தார்.

மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்மாய் தூர்வாறுதல், ஊரணி பராமரிப்பு , ஆழ்துளை கிணறு அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரையை அரசே மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தீர்மானமாக பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் இருவன்பச்சேரி கிராம மக்கள் பாதை இளைஞர்கள் ரகுபதி, பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அதிகாரிகளிடம ஒருமனதாக கோரிக்கையை வைத்தனர். மேலும் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் செயல்படக்கூடிய பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!