18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடு முழுவதும்சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.!

நாடு முழுவதும்சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.!

எழுதியவர்: mohan June 22, 2019, 2:01 pm

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில்,மாணவமாணவிகள்பல்வேறு யோகாசனங்களைசெய்துகாண்பித்துஅசத்தினர்.இந்நிகழ்ச்சிக்குலெட்சுமி, (தலைவர் பள்ளி மேலாண்மைக் குழு) தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமையாசிரியர்ஜோ.ஆர்தர், முன்னிலை வகித்தார்.மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.மேலும், முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பாராட்டிச் சென்றார்கள்.

மதுரை மாநகர காவல்துறை சார்பாக ஆயுதப்படை மைதானத்தில்  யோகா பயிற்சி நடைபெற்றது. யோகா ஆசிரியர் .முனைவர். ரவிச்சந்திரன்  மூலமாக  கங்காதரன்  அனைவருக்கும் யோகா பயிற்சி அளித்தார். இந்த யோகா பயிற்சியில், சூர்ய நமஸ்காரம், பிரணாயாமா, மூச்சு பயிற்சி மற்றும் பல்வேறு ஆசனங்களை கற்றுக்கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!