18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக கிராமமக்கள் அறிவிப்பு

நிலக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக கிராமமக்கள் அறிவிப்பு

எழுதியவர்: mohan June 22, 2019, 1:33 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாலையகவுண்டன்பட்டி ஊராட்சியில் உள்ள முருகத்துரான்பட்டி உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி காலனியில் சுமார் 250 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இக்கிராமத்தினர் விவசாய சார்ந்த கூலி வேலை செய்து வருகின்றனர் .இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குடிதண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்தில் உள்ளனர் அதேபோல் அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, சுகாதார வளாகம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு கிடையாது .

தற்போது இந்த கிராமத்தில்  ஐந்து ஆழ்துளை கிணறுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது .      இந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது .       ஒரு குடம் தண்ணீர் ரூபாய் 10 முதல்-15 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் .இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லாமல் போனதால் கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள்.

   இந்த மனுவை உடனடியாக பரிசீலனை செய்வதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளை ஆய்வு பணிக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் ஆய்வு செய்தவர்கள் அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள் உடனடியாக செய்து தருவதாக கூறி சென்ற  தற்போது 15 நாட்களாகிய நிலையில் மீண்டும் எந்த ஒரு குடிநீர் வழங்க படவில்லை .  இந்நிலையில் தற்போது குடிநீருக்காக அப்பகுதி மக்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பக்கத்து கிராமங்களுக்கு காலி குடங்களுடன் அலைகின்றனர் .மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சி செயலாளர் கார்த்தி முற்றுகையிட்டு கேட்கும் பொழுது ஏளனமாக பேசுவதாகவும் தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறுவதாக நீங்கள் யாரிடம் எல்லாம் சொல்லுங்கள் என கூறி வருவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் .

குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் ஒட்டுமொத்த கிராமத்தினரும் குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடமும் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் ஊரை காலி செய்து விட்டு ஊரை விட்டு வெளியேறுவதைத்  தவிர வேறு வழியில்லை என்றும்  ஆகவே உடனடியாக எங்களது பகுதிக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!