தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் அரசு மேனிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி மையம் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி செய்யும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகளை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்.பிருத்விராஜ் செயல்விளக்கம் அளித்தார்.
மேலும் பள்ளியில் வளமான இதயத்திற்க்கு யோகா என்ற பொருள் பொதிந்த யோகா 2019 என்ற வடிவில் மாணவர்கள் அணிவகுத்து நின்றனர் இதில் சுமார் பள்ளியில் உள்ள 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர் மேலும் பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பள்ளி வரை 2கிலோ மீட்டர் தூரம் வரை மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி கையில் ஏந்;தியபடி ஒடி வந்து யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமைஆசிரியர் அறிவுடை நம்பி தலைமை வகித்தார் சுகாதார ஆய்வாளர்கள் நாகராஜ் சண்முகம் பல்நோக்கு பணியாளர் ராஜேஸ்வரி மற்றும் மருத்துவ பணியாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.