சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திரு கோவிலின் ஆனி பிரமோற்சவ திரு தேரோட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம் ,இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான தங்காலமலை ஸ்ரீ ஷேத்திரம்என்றுஅழைக்கக்கூடியதிருத்தங்கலில்அமைந்துள்ள 108 திவ்ய தேச தலங்களில் புகழ் பெற்ற ஒன்றான ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் திருகோவிலின் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் நடைபெற்றன கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா இன்று முக்கிய திருவிழாவின் நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றன. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் , மற்றும் இந்து அறநிலைத்துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

கோவிந்த கோவிந்த என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர் மேலும் பெண்கள் பக்தர்கள் குழு சார்பாக கோலாட்டம் நடைப்பெற்றனர் தேரோட்டைத் தை காண சிவகாசி சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பாதுகப்பு நலன் கருதி ஏராளமான போலீஸார் பணியில் இருந்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருத்தங்கல் நகராட்சி சார்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டன.
.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.