17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கர்ப்பிணிப் பெண்களுக்கு மருந்து, மாத்திரை இல்லை.பாலக்கோடு அருகே அழைக்கழிக்கப்படும் பெண்கள்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மருந்து, மாத்திரை இல்லை.பாலக்கோடு அருகே அழைக்கழிக்கப்படும் பெண்கள்.

எழுதியவர்: mohan June 21, 2019, 3:53 pm
பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து மாத்திரைகள் இருப்பு இல்லை என அலைக்கடிப்பு பெண்கள் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பெல்ரம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகின்றது. தினதோரும் நூற்றுக்கணக்கான கிராம பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர். கிராம பகுதியில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்கள் வாரத்திதோரும் பரிசோதனைக்கு வந்து செல்லுகின்றனர். இவர்களுக்கு தேûவாயன மருந்து மாத்திரைகள் போதுமானது வரை இருப்பு இல்லை என்றும் மாத்திரைகளை சரிவர கொடுப்பத்தில்லை என்றும் தொடர்ந்து வற்ப்புருத்தினால் வேண்டும் என்றால் தனியார் மருந்துமனை மற்றும் தனியார் மருந்தகத்திற்கு செல்லுங்கள் என அலச்சியமாகவும், அதிகார வர்கத்தில் பேசுவதா பெண்கள் தெரிவிக்கின்றனர்.
கரகூர்,சீரியம்பட்டி,ஈச்சம்பள்ளம், கோடூர்மலைகிராமம், ஆத்துக்கொட்டாய்,வாழைத்தோட்டம், குப்பன்கொட்டாய் போன்ற கிராமபகுதியில் இருந்து கர்பபிணி பெண்கள் வந்து செல்லுகின்றனர். தமிழக அரசு கர்ப்பிணிபெண்களுக்கு பல்வெறு  இலவசமாக திட்டங்களை கொடுத்து வருகின்றது. ஆனால் பெல்ரம்பட்டியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு அளிக்கும் எந்த திட்டங்களும் எங்களுக்கு விரைவாக வருவதில்லை என்றும் அப்படியே வந்தாலும் காலதாமதமாக வருவதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். இங்கு செயல்பட்டு வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்திற்க்கு வருவதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நவடிக்கை மேற்கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!