உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் உலக சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவண்டன்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் உலக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது . இதில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளை சார்பில் டாக்டர் கண்ணன் மற்றும் யோக பயிற்சியாளர் ராமலட்சுமி மாணவர்களுக்கு கை, கால், நுரையீரல், கண், கபாளம், மற்றும் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இந்த யோகா நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் மதன் பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.
உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்







You must be logged in to post a comment.