17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

எழுதியவர்: mohan June 21, 2019, 12:04 pm

கடையநல்லூர் அருகே கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் ஜூன்.21 இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சரகத்திற்குட்பட்ட கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா 21.06.19 இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் யோகா கலையில் உள்ள பல்வேறு ஆசனங்களை அழகாக செய்து காட்டி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.சிறப்பாக யோகா செய்த பள்ளி மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!