17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே 4 பசுமாடுகள் மர்மச்சாவு அதிகாரிகள் நேரில் ஆய்வு..

நிலக்கோட்டை அருகே 4 பசுமாடுகள் மர்மச்சாவு அதிகாரிகள் நேரில் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2019, 8:09 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். ஊத்து பட்டியைச் சேர்ந்த ஒச்சு மகன் மகேந்திரன் வயது (30).இவர் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகிறார்.                 இவருக்கு சொந்தமான மாடுகள் நேற்று (18/06/2019) வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றது..          மேய்ச்சலுக்குச் சென்று வீடு திரும்பிய மாடுகள் ஒன்றொன்றாக கீழே விழுந்து இறந்துள்ளது.

இந்த மாடுகள் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதே ஊரைச் சேர்ந்த ஓச்சப்பன் வயது 55. என்பவரின்    ஒரு மாடு இதே மாதிரி மேய்ச்சலுக்கு சென்றது இறந்து போனது.  அதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ஆகும்.

இத்தகவல் அறிந்த நூத்துலாபுரம்    கால்நடை துறை உதவி மருத்துவர் தனசேகரன் தலைமையில் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உடன்  கிராம நிர்வாக அலுவலர் கணேசன், கால்நடை உதவியாளர்கள் முத்து, ராஜ்குமார் உள்பட பலர் இருந்தனர்.  மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் திடீரென மர்மமான முறையில் இறந்ததை அதைப்பார்த்த இக்கிராம மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!