17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுர மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு..

இராமநாதபுர மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு..

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2019, 12:51 am

கடந்த 09.06.2019 அன்று இராமநாதபுரம் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற  பாராளுமன்ற உறுப்பினர்  நவாஸ் கனி நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அச்சமயம் ஏற்பட்ட பிரச்சினையில் இராமநாதபுர இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா.ரகு கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று (18/06/2019) சூரக்கோட்டை திமுக  கிளைச் செயலாளர் கு.பாலமுரளி இராமநாதபுரம் ஆட்சியரை கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று, இச்சம்பவத்தில் வழுதூரை சார்ந்த அதிமுக கட்சியினர் காரணம் என சில அதிமுக நிர்வாகிகளின் பெயரை குறிப்பிட்டு அந்நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும் காவல்துறை பாராபட்சமாக இல்லாமல்  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!