18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி… நீண்ட நாள் பள்ளத்தை பொதுமக்களே சரி செய்ய வேண்டிய நிலை…

கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி… நீண்ட நாள் பள்ளத்தை பொதுமக்களே சரி செய்ய வேண்டிய நிலை…

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2019, 8:50 pm

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சாலையில் பல மாதங்களாக மிகப்பெரிய இரண்டு பக்கங்கள் இருந்து வந்தது. பல முறை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த பள்ளத்தினால் தினமும் பல பேர் விபத்துக்குள்ளாவது வாடிக்கையானது. இது தொடர்ந்தால் பள்ளம் பெரிதாகி உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகும் என்று அறிந்து, சமூக ஆர்வலர் வி.காளமேகம் முயற்சியில் பொதுமக்களை தங்களுடைய சொந்த காசில் ஜேசிபி வரவழைத்து பள்ளத்தை மூடி சரி செய்தனர்.

இதிலிருந்து அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என நமக்கு நாமே எந்த வேலையும் செய்தாலே போதும் என பொதுமக்கள் என எண்ணியதால் அந்த சாலை இப்போது தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!