18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2019, 8:01 pm

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 17.06.19 இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜி.செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படை புழுக்களால் தாக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்றும், விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் நகைகள் உட்பட அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தென் மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சனை விவசாயிகளின் பாசன வசதிக்கு ஏற்றாற்போல் அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!