17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அரசு அறிவிப்பு » அறிவிப்புகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு..

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2019, 3:26 pm

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade-I

காலியிடங்கள்: 2144

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Tamil – 319

2. English – 223

3. Mathematics – 279

4. Physics – 210

5. Chemistry – 356

6. Botany – 154

7. Zoology – 144

8. History – 104

9. Geography – 11

10. Economics – 211

11. Commerce – 99

12. Political Science – 14

13. Physical Education – 16

14. Bio Chemistry – 01

15. Micro Biology – 01

16. Home Science – 01

17. Indian Culture – 01

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்பிடிப்பில் ஒரே பாடத்தை படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf?fbclid=IwAR0bQ5zTmMGq12j1mt1NDdTV0_GzgbmF7XNg6tomZ3ovelEavss3lbuG5DM என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 24.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!